மணிகண்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த `குடும்பஸ்தன்’ படக்குழு| The team of ``Kudumbasthan'' wished Manikandan on his birthday

  மாலை மலர்
மணிகண்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த `குடும்பஸ்தன்’ படக்குழு| The team of ``Kudumbasthan wished Manikandan on his birthday

மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியிலும் அது வெற்றிப்படமாக அமைந்தது.இதைத்தொடர்ந்து அடுத்ததாக ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் `குடும்பஸ்தன்' திரைப்படத்தில் மணிகண்டன் நடித்துள்ளார். ராஜேஷ்வர் இதற்கு முன் நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் இயக்குனராக இருந்தவர். இதுவே இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் திரைப்படமாகும்.தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதன் மூலம் அவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார். இவர்களுடன் குரு சோமசுந்தரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிம்பு நேற்று வெளியிட்டார். இது நகைச்சுயான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாகாரன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சுஜித் சுப்பிரமணியன் ஒளிப்பதிவு மேற்கொள்ள, வைசாக் இசையமைத்துள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் மணிகண்டனுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

மூலக்கதை